அட !


சற்று நீ முன் சிரித்தபோது தான்
சிதறித் தொலைந்தேன் நான் !
அதை மெல்ல தேடி எடுப்பதற்குள்
ஏன் மறுபடி சிரித்தாய் ?

அவளுடன் ஓர் தேநீர் தருணம்


அவள் அறிமுகம் ஓர் மழை நாளில் !
சில நாட்கள் பின் ஓர் சந்திப்பில்
தேநீர் அருந்த அழைத்தேன் !
சற்று நடுத்தரமானதுதான்
சட்டென பிடிக்கும் அழகுடன்
இருந்தது அந்த தேநீர் விடுதி!
இரண்டு தேநீர் சொல்லிவிட்டு
இருக்கையில் உட்கார்ந்தோம் !
மெலிதாய் விரல்களில் பிடித்து
அவள் அருந்தும் அழகை ரசித்தேன்
அவள் அறியாத பொழுதுகளில் !
பேசிக்கொண்டேயிருந்தாள் !
பல வார்த்தைகள் காதில் விழவில்லை
ஒரே நேரத்தில் எத்தனையை கவனிப்பது ?
சிறிது நேரத்திற்குப்பின்
என் தேநீரை ஞாபகமூட்டிச் சிரித்தாள் !
பேசிக்கொண்டே பார்வையை சுற்றி சுழல விட்டேன் நான் !
அங்கு ஈக்கள் மொய்க்கவில்லை மேஜை மீது
ஆனால் ,
பல கண்கள் மொய்த்திருந்தது எங்கள் மீது !

என் அன்னைக்கு !



உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!

உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !

உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !

எல்லாம் மீண்டும் கிடைக்காதா? என்றே

ஏக்கம் பிறக்கும் தினமும்!

பலரும் பார்க்க,வியக்க மிகச்

சரியாய் வளர்த்தாய் என்னை !

வாழ்க்கை வாளின் கூர்மைகள் பலவும்

உன்னை குத்தி இம்சித்தும்

எள்ளளவும் அவை எனை அணுகாது

வழி தடுத்தாய் நீ !

தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!

உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது

என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.

உன் ஆசைகள் பலவும் எரிந்து மட்கித்தான்

என் ஆசைமலர்கள் மலர்ந்தன என்று

முன்பு அறியவில்லை நான் !

நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்

ஒன்று உண்டென்றால் அது நீதான் !

நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,மாறாக

உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !வளர்ந்தேன் !

உலகிலேயே தித்திப்பான கனி எது என்று

எனைக்கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீதானென !

ஆம்! கனி தான் தின்னத் தின்ன

திகட்டாத கனி !



என்ன செய்வாய் !




விழி நோக்கும் ஆண்மகனை
விரும்புவாளாம் பெண்மகள் !
விழி காண வழியில்லை !
நீ அங்கே !நான்இங்கே !
விரும்புவாயா என்னை?

நம் நட்பு

(குடந்தை நண்பன் கார்த்திக்கின் வேண்டுகோளுக்காக )


சில நாட்கள் முன்பு அது நமக்கு தெரியாமலே
நம்முள் முளைத்திருந்தது .
நாம் சொல்லிக்கொள்ளாமலே அது
நம்முள் நிறைந்திருந்தது.
சில நாட்கள் நம்மிடம் அது
கோபங்களாகவும் ,கவலைகளாகவும் ,
கண்ணீராகவும்,மௌனங்களாகவும்,
நிறைந்திருந்தது .
பல நாட்கள் நம்மிடம் அது
சந்தோசங்களாகவும்,அரட்டைகளாகவும்,
ஆனந்த விழிநீராகவும், பகிர்தலாகவும் ,
நிறைந்திருந்தது .
இன்றும் அது நிறைகிறது
இடைவேளிகளால்
இன்னமும் நிறையும் அது ஏதோ ஒரு வடிவில்
இடைவெளி குறைந்தாலும்! அதிகமானாலும்!

சந்திக்க ஏன் மறுத்தாய் ?




விழி காண
விரும்பினேன்
விடை தெரியவில்லை
விரித்துவிட்டாள்! கையை..
விம்முகிறது இதயம் !
விழி நீரோடு!
***********
வார்த்தைகள் நிறைந்த பொழுதுகள்
வார்த்தன வழியெங்கும் பூக்களை !
வார்த்தையற்ற பொழுதுகள்
வார்க்கின்றன வழியெங்கும் முட்களை !

அட !

Posted on Tuesday, October 21, 2008 - 2 comments -


சற்று நீ முன் சிரித்தபோது தான்
சிதறித் தொலைந்தேன் நான் !
அதை மெல்ல தேடி எடுப்பதற்குள்
ஏன் மறுபடி சிரித்தாய் ?

அவளுடன் ஓர் தேநீர் தருணம்

Posted on Friday, October 10, 2008 - 1 comments -


அவள் அறிமுகம் ஓர் மழை நாளில் !
சில நாட்கள் பின் ஓர் சந்திப்பில்
தேநீர் அருந்த அழைத்தேன் !
சற்று நடுத்தரமானதுதான்
சட்டென பிடிக்கும் அழகுடன்
இருந்தது அந்த தேநீர் விடுதி!
இரண்டு தேநீர் சொல்லிவிட்டு
இருக்கையில் உட்கார்ந்தோம் !
மெலிதாய் விரல்களில் பிடித்து
அவள் அருந்தும் அழகை ரசித்தேன்
அவள் அறியாத பொழுதுகளில் !
பேசிக்கொண்டேயிருந்தாள் !
பல வார்த்தைகள் காதில் விழவில்லை
ஒரே நேரத்தில் எத்தனையை கவனிப்பது ?
சிறிது நேரத்திற்குப்பின்
என் தேநீரை ஞாபகமூட்டிச் சிரித்தாள் !
பேசிக்கொண்டே பார்வையை சுற்றி சுழல விட்டேன் நான் !
அங்கு ஈக்கள் மொய்க்கவில்லை மேஜை மீது
ஆனால் ,
பல கண்கள் மொய்த்திருந்தது எங்கள் மீது !

என் அன்னைக்கு !

Posted on - 1 comments -



உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!

உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !

உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !

எல்லாம் மீண்டும் கிடைக்காதா? என்றே

ஏக்கம் பிறக்கும் தினமும்!

பலரும் பார்க்க,வியக்க மிகச்

சரியாய் வளர்த்தாய் என்னை !

வாழ்க்கை வாளின் கூர்மைகள் பலவும்

உன்னை குத்தி இம்சித்தும்

எள்ளளவும் அவை எனை அணுகாது

வழி தடுத்தாய் நீ !

தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!

உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது

என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.

உன் ஆசைகள் பலவும் எரிந்து மட்கித்தான்

என் ஆசைமலர்கள் மலர்ந்தன என்று

முன்பு அறியவில்லை நான் !

நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்

ஒன்று உண்டென்றால் அது நீதான் !

நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,மாறாக

உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !வளர்ந்தேன் !

உலகிலேயே தித்திப்பான கனி எது என்று

எனைக்கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீதானென !

ஆம்! கனி தான் தின்னத் தின்ன

திகட்டாத கனி !



என்ன செய்வாய் !

Posted on Wednesday, October 8, 2008 - 1 comments -




விழி நோக்கும் ஆண்மகனை
விரும்புவாளாம் பெண்மகள் !
விழி காண வழியில்லை !
நீ அங்கே !நான்இங்கே !
விரும்புவாயா என்னை?

நம் நட்பு

Posted on - 1 comments -

(குடந்தை நண்பன் கார்த்திக்கின் வேண்டுகோளுக்காக )


சில நாட்கள் முன்பு அது நமக்கு தெரியாமலே
நம்முள் முளைத்திருந்தது .
நாம் சொல்லிக்கொள்ளாமலே அது
நம்முள் நிறைந்திருந்தது.
சில நாட்கள் நம்மிடம் அது
கோபங்களாகவும் ,கவலைகளாகவும் ,
கண்ணீராகவும்,மௌனங்களாகவும்,
நிறைந்திருந்தது .
பல நாட்கள் நம்மிடம் அது
சந்தோசங்களாகவும்,அரட்டைகளாகவும்,
ஆனந்த விழிநீராகவும், பகிர்தலாகவும் ,
நிறைந்திருந்தது .
இன்றும் அது நிறைகிறது
இடைவேளிகளால்
இன்னமும் நிறையும் அது ஏதோ ஒரு வடிவில்
இடைவெளி குறைந்தாலும்! அதிகமானாலும்!

சந்திக்க ஏன் மறுத்தாய் ?

Posted on Tuesday, October 7, 2008 - 1 comments -




விழி காண
விரும்பினேன்
விடை தெரியவில்லை
விரித்துவிட்டாள்! கையை..
விம்முகிறது இதயம் !
விழி நீரோடு!
***********
வார்த்தைகள் நிறைந்த பொழுதுகள்
வார்த்தன வழியெங்கும் பூக்களை !
வார்த்தையற்ற பொழுதுகள்
வார்க்கின்றன வழியெங்கும் முட்களை !