
முன்னோர் நாள்
நீ சூடானாய்நாம்
பிரிந்தோம்
காற்றிலே உனை
தேடித்திரிந்தேன்
போகும்
வழியெங்கும்
சில நாட்கள்
பின்னர்
ஓர் குளிர்பான
அங்காடியில்
குளிர்ந்தமர்ந்தாய்
நீ
உனை
தோலைவிலிருந்து
கண்டுகொண்ட
நான்
அருகில்
வந்தேன்
உனை
அணைக்கவென
அருகில்
வந்தால்
உனக்கும்
எனக்கும்
இடையில்
திரையாய்க்
கண்ணாடி
செய்வதறியாமல்
படர்ந்தேன்
உனைச் சுற்றி
அணைக்கத்தான்
முடியவில்லை
அருகிலேனும்
இருப்போமென
படர்கையில்
ஏனோ
வழிந்தது
கண்ணீர்
எனையறியாமல் !
***************