உன் விழிச் சாரலில் நனைந்த முதல் நாள்
என் வாழ்வின் ஓளி மிக்க நாள்
நீ உன் கண்களை திறந்தாய்
நான் காதல் கற்றேன்.
உன் இதழ்கள் திறந்தாய்
என் இதயம் தொலைத்தேன்.
******
காதல் என்ற வார்த்தையை
எனக்கு அறிமுகம் செய்தாய் .
உன்னைப்பற்றி கவிதை எழுத
வார்த்தைகளை தேட வைத்தாய்
வார்த்தைகளை தேடி அலைகையில்
வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு மெல்ல சிரித்தாய் !
கனவுலகை அறிமுகம் செய்தாய்
கனவுக்குள் விளையாடினாய்
எத்தனையோ உறவுகள் இருந்தாலும்
புது உறவாய் நுழைந்தாய்
வாழ்வாங்கு வாழ்வாய் என்று வையகமே
புகழ்ந்தாலும் உன் ஒற்றை சொல்லுக்காய்
உயிர் நோக காக்க வைத்தாய்
காத்திருக்கிறேன் உனக்காக..............உயிர் உள்ள வரையில்!
************
என்னுடன் நீ பேசவில்லைஎனில்
என் இதயத்தில் எரிமலை .
என்னுடன் பேசிவிட்டாலோ
என் இதயத்தில் அடைமழை .
***********
உன்னை பார்த்தப்பின் கைதேர்ந்த
நடிகனாகிறேன் உன்னைப்பார்க்காததைப் போல!
என் வாழ்வின் ஓளி மிக்க நாள்
நீ உன் கண்களை திறந்தாய்
நான் காதல் கற்றேன்.
உன் இதழ்கள் திறந்தாய்
என் இதயம் தொலைத்தேன்.
******
காதல் என்ற வார்த்தையை
எனக்கு அறிமுகம் செய்தாய் .
உன்னைப்பற்றி கவிதை எழுத
வார்த்தைகளை தேட வைத்தாய்
வார்த்தைகளை தேடி அலைகையில்
வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு மெல்ல சிரித்தாய் !
கனவுலகை அறிமுகம் செய்தாய்
கனவுக்குள் விளையாடினாய்
எத்தனையோ உறவுகள் இருந்தாலும்
புது உறவாய் நுழைந்தாய்
வாழ்வாங்கு வாழ்வாய் என்று வையகமே
புகழ்ந்தாலும் உன் ஒற்றை சொல்லுக்காய்
உயிர் நோக காக்க வைத்தாய்
காத்திருக்கிறேன் உனக்காக..............உயிர் உள்ள வரையில்!
************
என்னுடன் நீ பேசவில்லைஎனில்
என் இதயத்தில் எரிமலை .
என்னுடன் பேசிவிட்டாலோ
என் இதயத்தில் அடைமழை .
***********
உன்னை பார்த்தப்பின் கைதேர்ந்த
நடிகனாகிறேன் உன்னைப்பார்க்காததைப் போல!
1 comments:
முட்டைக்கண்ணி - தலைப்பு ஏன்
கவைதை நல்ல கவிதை
நல்வாழ்த்துகள் காதல் கவி
Post a Comment