கடலைகளை பிரித்தெடுத்து
குவியலாய்
காகித சுருள்கள் நேர்த்தியான கோபுரமாய்
மணலோடு மரண ஓலமிட வறுக்கின்றான்பசி ஓலமிடும் அவன் வயிற்றின் தேவைக்காக !
வறுக்கும் ஓசையும் தட்டும் சத்தமும் கவன ஈர்ப்பு இசையாக,பதமாய் வறுக்கும் அவனை
பதம் பார்க்கிறது வாழ்க்கை !"கடைசியில் என்னிடம் தான் வருவாய்"
சபிக்கும் மணலை வறுக்கிறான்!மீண்டும்! மீண்டும் !
உண்ணப்படுவதால் தொடர்கிறது இவன் வாழ்க்கை !
ஆம்!இவன் விற்பதை உண்பவர்களால்!
'இரண்டு ரூபாய் அநியாயம் ' என பேரம் பேசுவார்கள்!
இவன் உழைப்பின் மதிப்பறியார்!
'கடலையாய்' ஜோடிகள் !
'அரசியலாய்' பெரிசுகள் !`கிசு கிசுப்பாய் 'மாமிகள் !
'ஆசையாய்'சிறிசுகள் !என அனைவரும் மெள்ள! மெள்ள !
நகர்கிறது அவன் வாழ்க்கை மெல்ல மெல்ல ....
1 comments:
மெள்ள மெள்ள - மென்று தினபதைக் குறிக்கும் சொற்களா - சரியா - தவறா
நல்வாழ்த்துகள் காதல் கவி
Post a Comment