என் இரவைக் கெடுத்தன
நடுநிசி வரை நீண்டன தினமும்
என் தூக்கமில்லா இரவுகள் !
என் அழகில் சந்தேகம் வந்தது என்னுள்
என்னையும் என்னைச்சுற்றியும்
அழகுபடுத்த முனைந்தேன் !
என் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் !
என் அழகில் சந்தேகம் வந்தது என்னுள்
என்னையும் என்னைச்சுற்றியும்
அழகுபடுத்த முனைந்தேன் !
என் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் !
உன்னுடன் சேர்த்து எனக்கு
காதலும் அறிமுகம் ஆகியது அன்று தான் !
அதே நாள் தான் என் வயதையும்
எனக்குச் சொல்லியது !
வானொலியில் வரும் பாடல்கள்
எனக்காக எழுதப்படுவதாக உணர்ந்ததும்
உலகே அன்பு மயமானதும் அன்று முதல் தான் !
அன்று நாம் பேசிய வார்த்தைகளும்
பார்த்த பார்வைகளும்
பார்த்த பார்வைகளும்
இன்று வரை ஓடிக்கொண்டேயிருக்கிறது
என் நினைவுத்திரையில்
பல வெள்ளி விழாக்களைக் கடந்தும்
என் நினைவுத்திரையில்
பல வெள்ளி விழாக்களைக் கடந்தும்
முடிவுறாமல் !
1 comments:
உண்மை உண்மை - பல வெள்ளி விழாக்களைக் கடந்தும் தொடரும் அன்பு
வாழ்க வாழ்க
நல்வாழ்த்துகள் காதல் கவி
Post a Comment