ஹைக்கூ(26)




துகிலுரிந்த துச்சாதனின்
கண்களில் கண்ணீர்
வெங்காயம்



*******

ஹைக்கூ(25)



மென்மையில்லை
பூக்களைக் கையாண்டும்
பூக்காரியின் விரல்கள்





****

காத்திருப்பேன்....



காத்திருப்பேன்
என
கண்ணீருருடன்
கையழுத்திச்
சென்றாய்
என்னைப்
பிரிந்த
நம் கடைசி
சந்திப்பில்!

அப்போது எனக்குத்
தெரியவில்லை
நீ சொன்னது
உன் பெற்றோரின்
சொல்படி
உன் மனம்
மாறும் வரை
தான் என்றும்
உன் திருமணம்
நிச்சயம் ஆகும்
வரை தான்
என்றும்

என்ன செய்ய
சில நேரங்களில்
சில கேள்விகளுக்கும்
பதில்களுக்கும்
அர்த்தங்கள்
வேறாகவே
இருக்கிறது
அது நிகழும்
வரை !
******************

பிரிவு



(தலைப்பு அனுப்பியவர் அஸ்வினி அவர்கள்)
நீ எதற்காக
என்னை
பிரிந்தாய்
பிரிவு காதலை
அதிகமாக்கும்
என்கிறார்களே
அதற்காகவா ?
இல்லை
ஊடலும்
ஒரு வகைக்
காதலே
என்கிறார்களே
அதற்காகவா ?
அல்லது
நான் உனக்காக
எவ்வளவு
வருந்துகிறேன்
என தெரிந்து
கொள்வதற்ககாகவா?
எதுவாக
இருந்தாலும்
பின்பு தெரிந்து
கொள்வோம்

நீ !என்னுடனே
இருந்து விடு.


*************

வால் விண்மீன் !

(குட்டிப் பாப்பா அமித்துவுக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்..24நவம்பர் 2009 )

விழித்ததும்
முகம் கழுவி
விழியோரம்
மையெழுதி
அமாவாசை
நிலவைப் போல
கன்னத்தில்
பொட்டிட்டு
கடைத்தெருவிற்கு
அழைத்துச் சென்று
கைநீட்டும்
பொருள்
கொடுத்து
வீட்டிற்கு
திரும்பி வந்து
விளையாடி
வா என்று
கீழிறக்கி
விட்ட பின்னால்

விளையாடி....
நீ
திரும்புகையில்
பின்னிரவில்
உலா வரும்
வால் விண்மீன்
அதுபோல
வால் நீட்டி
புன்னகைக்கும்
நான் வைத்த
திருஷ்டிப்
பொட்டு!

தந்தை!


சொந்தக்காலில்
நிற்க விரும்பி
சுயமாக
தொழில்கள்
தொடங்கி

தொடர்ந்து
அதில்
தோல்வி
கண்டு
மனைவிக்கு
மகிழ்ச்சி
மறுத்து

தனக்கான
தேவையாவும்
தகடளவு
குறைத்துக்
கொண்டு
பிள்ளைகளை
பள்ளிக்கனுப்பி

தடுமாறி
வாழ்வியக்கி
பிள்ளைகளை
ஆளாக்கி

தளர்ந்திடும் வயது
வந்தும்
தனக்கொரு
வெற்றி வாரா
காரணம்
என்னவென
தேடியும்
கிடைக்காமல்
களைத்திருக்கும்
தகப்பனிடம்

பிள்ளைகள்
கேட்கவென
அடுத்தடுத்து
காத்திருக்கும்

வரிசையாய்
கேள்விகள்
‘என்ன செய்தாய்
நீ எனக்கு ?
ஏனில்லை
சொத்தெனக்கு ?

நாகரீகம் ?




ஸ்டைலென்று
எண்ணி
புகைப்பிடித்துப்
பழகும்

அரைகுறை
ஆடை
அணிந்து
அளவில்லா
பெருமை
கொள்ளும்

விருந்து மற்றும்
விஷேசங்ளில்
மரியாதைக்காய்
மது பருகும்

அழகது
குறையும் என
தாய்மை அதை
தவிர்த்தோடும்

தவிர்க்க இயலா
தாய்மை கண்டால்
தாய்ப்பால் தர
மறுக்கும்

வேலை வேலை
என்றலைந்து
பிள்ளைகளை
காப்பகம்
இடும்

வீண் செலவு
என்றறிந்தும்
வாசலுக்கும்
வாகனம்
கேட்கும்

கூடி விட்ட
எடை குறைக்க
குறுக்கு வழி
மருந்து தேடும்

எதைப் பெற்றோம்
எதையிழந்தோம் என
இறுதியில் மதி குழம்பி

இயன்றவரை
இயல்பைத்
தொலைக்கும்
இன்றைய
மற்றும்
இனிவரும்
நாகரீகம் !

ஹைக்கூ(26)

Posted on Sunday, December 27, 2009 - 3 comments -




துகிலுரிந்த துச்சாதனின்
கண்களில் கண்ணீர்
வெங்காயம்



*******

ஹைக்கூ(25)

Posted on Thursday, December 24, 2009 - 4 comments -



மென்மையில்லை
பூக்களைக் கையாண்டும்
பூக்காரியின் விரல்கள்





****

காத்திருப்பேன்....

Posted on Tuesday, December 8, 2009 - 1 comments -



காத்திருப்பேன்
என
கண்ணீருருடன்
கையழுத்திச்
சென்றாய்
என்னைப்
பிரிந்த
நம் கடைசி
சந்திப்பில்!

அப்போது எனக்குத்
தெரியவில்லை
நீ சொன்னது
உன் பெற்றோரின்
சொல்படி
உன் மனம்
மாறும் வரை
தான் என்றும்
உன் திருமணம்
நிச்சயம் ஆகும்
வரை தான்
என்றும்

என்ன செய்ய
சில நேரங்களில்
சில கேள்விகளுக்கும்
பதில்களுக்கும்
அர்த்தங்கள்
வேறாகவே
இருக்கிறது
அது நிகழும்
வரை !
******************

பிரிவு

Posted on - 1 comments -



(தலைப்பு அனுப்பியவர் அஸ்வினி அவர்கள்)
நீ எதற்காக
என்னை
பிரிந்தாய்
பிரிவு காதலை
அதிகமாக்கும்
என்கிறார்களே
அதற்காகவா ?
இல்லை
ஊடலும்
ஒரு வகைக்
காதலே
என்கிறார்களே
அதற்காகவா ?
அல்லது
நான் உனக்காக
எவ்வளவு
வருந்துகிறேன்
என தெரிந்து
கொள்வதற்ககாகவா?
எதுவாக
இருந்தாலும்
பின்பு தெரிந்து
கொள்வோம்

நீ !என்னுடனே
இருந்து விடு.


*************

வால் விண்மீன் !

Posted on Saturday, November 21, 2009 - 4 comments -

(குட்டிப் பாப்பா அமித்துவுக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்..24நவம்பர் 2009 )

விழித்ததும்
முகம் கழுவி
விழியோரம்
மையெழுதி
அமாவாசை
நிலவைப் போல
கன்னத்தில்
பொட்டிட்டு
கடைத்தெருவிற்கு
அழைத்துச் சென்று
கைநீட்டும்
பொருள்
கொடுத்து
வீட்டிற்கு
திரும்பி வந்து
விளையாடி
வா என்று
கீழிறக்கி
விட்ட பின்னால்

விளையாடி....
நீ
திரும்புகையில்
பின்னிரவில்
உலா வரும்
வால் விண்மீன்
அதுபோல
வால் நீட்டி
புன்னகைக்கும்
நான் வைத்த
திருஷ்டிப்
பொட்டு!

தந்தை!

Posted on - 2 comments -


சொந்தக்காலில்
நிற்க விரும்பி
சுயமாக
தொழில்கள்
தொடங்கி

தொடர்ந்து
அதில்
தோல்வி
கண்டு
மனைவிக்கு
மகிழ்ச்சி
மறுத்து

தனக்கான
தேவையாவும்
தகடளவு
குறைத்துக்
கொண்டு
பிள்ளைகளை
பள்ளிக்கனுப்பி

தடுமாறி
வாழ்வியக்கி
பிள்ளைகளை
ஆளாக்கி

தளர்ந்திடும் வயது
வந்தும்
தனக்கொரு
வெற்றி வாரா
காரணம்
என்னவென
தேடியும்
கிடைக்காமல்
களைத்திருக்கும்
தகப்பனிடம்

பிள்ளைகள்
கேட்கவென
அடுத்தடுத்து
காத்திருக்கும்

வரிசையாய்
கேள்விகள்
‘என்ன செய்தாய்
நீ எனக்கு ?
ஏனில்லை
சொத்தெனக்கு ?

நாகரீகம் ?

Posted on - 2 comments -




ஸ்டைலென்று
எண்ணி
புகைப்பிடித்துப்
பழகும்

அரைகுறை
ஆடை
அணிந்து
அளவில்லா
பெருமை
கொள்ளும்

விருந்து மற்றும்
விஷேசங்ளில்
மரியாதைக்காய்
மது பருகும்

அழகது
குறையும் என
தாய்மை அதை
தவிர்த்தோடும்

தவிர்க்க இயலா
தாய்மை கண்டால்
தாய்ப்பால் தர
மறுக்கும்

வேலை வேலை
என்றலைந்து
பிள்ளைகளை
காப்பகம்
இடும்

வீண் செலவு
என்றறிந்தும்
வாசலுக்கும்
வாகனம்
கேட்கும்

கூடி விட்ட
எடை குறைக்க
குறுக்கு வழி
மருந்து தேடும்

எதைப் பெற்றோம்
எதையிழந்தோம் என
இறுதியில் மதி குழம்பி

இயன்றவரை
இயல்பைத்
தொலைக்கும்
இன்றைய
மற்றும்
இனிவரும்
நாகரீகம் !