
உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!
உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !
உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !
எல்லாம் மீண்டும் கிடைக்காதா? என்றே ஏக்கம் பிறக்கும் தினமும்!பலரும் பார்க்க,வியக்க மிகச்
சரியாய் வளர்த்தாய் என்னை !
வாழ்க்கை வாளின் கூர்மைகள் பலவும்
உன்னை குத்தி இம்சித்தும்எள்ளளவும் அவை எனை அணுகாது
வழி தடுத்தாய் நீ !
தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !
அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது
என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.
உன் ஆசைகள் பலவும் எரிந்து மட்கித்தான்
என் ஆசைமலர்கள் மலர்ந்தன என்றுமுன்பு அறியவில்லை நான் !
நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்
ஒன்று உண்டென்றால் அது நீதான் !
நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,மாறாக
உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !வளர்ந்தேன் !
உலகிலேயே தித்திப்பான கனி எது என்றுஎனைக்கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீதானென !
ஆம்! கனி தான் தின்னத் தின்ன
திகட்டாத கனி !
1 comments:
தின்னத் தின்ன திகட்டாத கனி பெற்ற தாய்தான் - உண்மை
நல்வாழ்த்துகள் காதல் கவி
Post a Comment