வாழ்விற்கு அர்த்தம் தேடி அலைபவர் யாவருமே
நட்பொன்று கொண்டிருந்தால் வாழ்வு அது இனிமை !
என் தோழியும் அப்படித்தான்
என் தேடல் வழி வந்தாள்!
நான் தேடாப் பொருளாய் வந்து
என் வாழ்வில் இனிமை தந்தாள் !
நட்பு எனும் மூன்றெழுத்தை
முடிவிலியாக்க முயன்றோம் !
அந்தோ பரிதாபம் !
காலத்தை வென்றவர் யார்தான் உளர்?
நாங்களும் பிரிந்தோம் ! உணரவில்லை அன்று!
மீண்டும் கண்டோம் ! சில வருடங்கள் கடந்து
சிறு நேர சந்திப்புகள் -உயிர் பாதி மீண்டோம் !
தோல்விகள் பலவும் என்னை துரத்திய நேரத்தில்
தோற்கடிக்க நான் முயன்றும் துவண்டிடும் பொழுதுகளில்
தோழமையாய் நின்றெந்தன் மனச்சுமைகள்
போக்கிட்டாள் -என் தோழி!
கேளுங்கள் மக்களே !நான் கூறுவதை கொஞ்சம் !
காணுங்கள்! நட்பெனும் செல்வத்தை வாழ்நாளெல்லாம்
வாழுங்கள்! நிறைவாக ,
வாழ்ந்துறும் பொழுதுகளில்
பகிர்ந்துண்டு வாழ நினை!
வாழ்வியல் தத்துவம் இதை
வழங்கியது நட்பு என்பேன் !
சுற்றிலும் தீமை உன்னை
சுளுகின்ற போதிலும்
அழுக்கிலா நட்பு அது
காத்திடும் இன்றும் என்றும்
இன்னளவும் தொடருகின்றேன்
உள்ளளவும் நட்பெனதை
முடிவிலியாக்க தினம்
முயற்சிகள் தொடர்ந்துகொண்டே ............
நட்பொன்று கொண்டிருந்தால் வாழ்வு அது இனிமை !
என் தோழியும் அப்படித்தான்
என் தேடல் வழி வந்தாள்!
நான் தேடாப் பொருளாய் வந்து
என் வாழ்வில் இனிமை தந்தாள் !
நட்பு எனும் மூன்றெழுத்தை
முடிவிலியாக்க முயன்றோம் !
அந்தோ பரிதாபம் !
காலத்தை வென்றவர் யார்தான் உளர்?
நாங்களும் பிரிந்தோம் ! உணரவில்லை அன்று!
மீண்டும் கண்டோம் ! சில வருடங்கள் கடந்து
சிறு நேர சந்திப்புகள் -உயிர் பாதி மீண்டோம் !
தோல்விகள் பலவும் என்னை துரத்திய நேரத்தில்
தோற்கடிக்க நான் முயன்றும் துவண்டிடும் பொழுதுகளில்
தோழமையாய் நின்றெந்தன் மனச்சுமைகள்
போக்கிட்டாள் -என் தோழி!
கேளுங்கள் மக்களே !நான் கூறுவதை கொஞ்சம் !
காணுங்கள்! நட்பெனும் செல்வத்தை வாழ்நாளெல்லாம்
வாழுங்கள்! நிறைவாக ,
வாழ்ந்துறும் பொழுதுகளில்
பகிர்ந்துண்டு வாழ நினை!
வாழ்வியல் தத்துவம் இதை
வழங்கியது நட்பு என்பேன் !
சுற்றிலும் தீமை உன்னை
சுளுகின்ற போதிலும்
அழுக்கிலா நட்பு அது
காத்திடும் இன்றும் என்றும்
இன்னளவும் தொடருகின்றேன்
உள்ளளவும் நட்பெனதை
முடிவிலியாக்க தினம்
முயற்சிகள் தொடர்ந்துகொண்டே ............
2 comments:
hai machi good kavithai
அன்பின் காதல் கவி - தத்துவம் பேசுகிற கவிதை
நல்வாழ்த்துகள் காதல் கவி
Post a Comment