மற்ற சராசரி பயணிகளைப்
போல அல்ல நீ !
அறிமுகத்திலேயெ சட்டென்று
நட்புக்கரம் நீட்டினாய்!
நட்பு எப்பொழுதும்
சுலபமானதாகவே இருக்கிறது
உனக்கு கை
வந்ததைப் போல!
ஏனோ சிலருக்கு அது
மிகவும் தொலைவாகவே
இருக்கிறது
அருகில் அமர்ந்தாலும்!
கரைத்தாய் நீ!
என் பயணத்தின்
சில மணித்துளிகளை
உன் உரையாடலாலும்,
மீதி மணித்துளிகளை
உன்னைப் பற்றிய கணிப்புகளாலும் !
நம்முடைய பயணம் முடிந்து
பல நாட்கள் கழிந்த பின்னும்
என்னுடனான உன் நட்பைத்
தொடர்கிறாய் இன்று வரை
அன்றைய என் எல்லா
கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி !
என்னுடைய இன்றைய
பயணங்களின் போது நினைவிலும்
நேரில் சந்திக்கும்போது
நிஜத்திலும்
பிரியத்துடனே
தரிசனம் தருகிறாய்
பெயருக்கு ஏற்றார் போல்!
1 comments:
எப்பொழுதாவது நிகழும் அதிசயம் இது
நல்ல கவிதை நல்வாழ்த்துகள் காதல் கவி
Post a Comment