Posted on Thursday, February 18, 2010 -
உறவுகள்,
நட்பு


உனக்கும்
எனக்குமான
இடைவெளி
பல நூறு
மைல்களாக
இருந்தபோதும்
அது
நம் கணினியின்
தட்டச்சுப்
பலகைக்கும்(அ)
(கைப்பேசிக்கும்)
நம்
விரல்களுக்கும்
இடையேயான
இடைவெளியாகவே
இருந்தது
ஆனால்
இன்று
அது
நமது மௌன
யுத்தங்களாலும்
நீ தொடங்குவாய்
என நானும்
நான் தொடங்குவேன்
என நீயும்
எண்ணும்
எண்ணப்
போர்வைகளாலும்
நீளமாகி
கொண்டிருக்கிறது
மறுபடியும்
சில மில்லி
மீட்டர்களிலிருந்து
பல மைல்களாய்
தொடங்குவது
யாரென்ற
பாகுபாடு
இல்லையெனில்
தூரமோ
இடைவெளியோ
அற்றே
இருக்கிறது
உலகம்
எப்போதும்
(உறவுகளைத் தொலைக்கும் யாவருக்குமான கவிதை)
***********
Posted on Sunday, February 14, 2010 -
காதல்

திறக்காத
மனங்கள்
எல்லாம்
திறந்து
கொள்ளும்
நாள் இன்று
திறந்து
நீயும்
சொல்லாவிடில்
எதற்குனக்கு
காதல்
என்று
தயக்கத்தை
மென்று
பயத்தைக்
கொன்று
தந்தே
விடு
அவ(ள்)ன்
கையில்
ரோஜா
ஒன்று
****
வெல்லட்டும் உன் காதல் இன்றைய தினமே !******
Posted on -
காதல்
(காதலர் தினத்திற்கு
முந்தைய நாள்
மாலையில்)
“காதல் பரிசாய்
உனக்கொன்று
தரப்போகிறேன்”
“என்ன அது ?”
பதிலை
நாளை
சொல்வதாய்
தொடர்பைத்
துண்டித்துக்
கொண்டாய் நீ
மறுமுறை
முயன்றும்
உன்னைத்
தொடர்பு
கொள்ள
முடியாமல்
போனது
என்னால் !
அடடா!
என்ன செய்வேன் !
என் கனவுக்
குதிரையின்
கடிவாளம்
அறுந்துவிட்டதே
இன்று
இரவு
அது
எங்கெல்லாம்
ஓடப்போகிறதோ ?
****************
Posted on -
காதல்,
பெண்மனம்

எனக்கே
என்னிடம்
பிடிக்காத
என்
முன்கோபம்
கூட ரசிக்கிறாய்
நீ
என் அசைவுகள்
அத்தனையும்
படம் பிடித்து
ரசிக்கும்
உன் கண்களாலும்
அது ஒய்வாக
இருக்கும்போது
உன் விரல்களின்
கவிதைகளாலும்
என் காதலை
தூண்டிக்
கொண்டேயிருக்கிறாய்
எனக்கொன்றும்
செய்யத்
தெரிவதில்லை
உன் மீதும்
உன்
கவிதைகள்
மீதும்
பைத்தியம்
கொள்வதைத்
தவிர
***********
Posted on Saturday, February 13, 2010 -
காதல்

"வீழ்வது வெட்கமல்ல
வீழ்ந்தே கிடப்பதே
வெட்கம்"
வீழ்ந்தேன் நான்
வெட்கப்பட்டாய்
நீ
*********
***********
Posted on -
காதல்

நீ
எதைச்
செய்து
கொடுத்தாலும்
அது
கலப்படம்
ஆகிவிடுகிறது
உன்
அழகிய
காதலும்
கலந்து.
***********
Posted on Friday, February 12, 2010 -
இயற்கை

அழகிய
வஸ்திரம்
பதவிசாய்
முன்பனி
(வஸ்திரம் =போர்வை,பதவிசாய்=சாந்தமாய்)
***********
Posted on Thursday, February 11, 2010 -

இன்னும் விழவில்லை
என் இதழில்
ஒட்டிக் கொண்ட
உனது புன்னகை
**********************
Posted on Wednesday, February 10, 2010 -
ஹைக்கூ

நாயுடன் வாக்கிங்
இளைத்தது தினமும்
நாய்
************
Posted on Tuesday, February 9, 2010 -
மழலை

தன்னால்
கீழே
விழாமல்
தனியாக
ஓட முடியும்
என
நம்பும் வரை
குழந்தையின்
தனியான
ஓட்டங்கள்
வேகமாய்
இருந்ததில்லை
தாய் தன்னை
பின்தொடரும்
போது மட்டுமே
அதன் ஓட்டம்
கட்டுக்குள்
அடங்காமல்
எல்லை மீறும்
ஏனெனில்
தன்னை
காக்கும்
தெய்வம் பின்
தொடர்வதால் !
********************
Posted on Monday, February 8, 2010 -
ஹைக்கூ

திறந்ததும் பிறந்தது
மறந்ததும் இறந்தது
காதல்
*****
Posted on Saturday, February 6, 2010 -
சிரிப்பு கவிதை

மாங்காய்
திருட்டைத்
தடுக்க
செருப்பு
தொங்கியது
மரத்தில்
திருடு
போனது
மறுநாள்
தொங்கிய
ஒற்றைச்
செருப்பு
********
Posted on Friday, February 5, 2010 -
பெண்மனம்

என் பள்ளிப் பருவ
நண்பனான நீ
என்னைப் பார்க்க
வந்திருக்கிறாய்
சம்பிராதயமான நம்
பேச்சுக்களுக்குப்பின்
‘நீ எப்படி
இப்படி மாறினாய் ?
உன் பழைய
புன்னகை எங்கே?
ஏன் எப்போதும்
இறுக்கத்துடனும்
சிடுசிடுவென்றும்
இருக்கிறாய் ?’
என வினவுகிறாய்
என் உயிர்
நண்பன்
உன்னிடம்
சொல்வதற்க்கென்ன
கேள் !
ஆம் !
சிறுவயதில்
எதற்கெடுத்தாலும்
சிரித்தவள் தான்
நான்
“ஏண்டி ! இப்படி
கெக்கே பிக்கே-ன்னு
சிரிக்கற” என்று
கேட்கும்
அப்பத்தாவையும்
கேலி செய்து
சிரித்தவள் தான்
ஆனால்
என் வயதுப்
பிராயத்தின்
ஆரம்பத்தில்
அதன் விளைவுகள்
வேறு மாதிரியாக
இருந்தது
நீ அழகாயிருக்கிறாய்
என்றும்
உன் சிரிப்பு
அழகாயிருக்கிறது
எனவும்
நிறைய நண்பர்கள்
அறிமுகமானார்கள்
என்னுடன்
அவர்களுடன்
அழையாத
விருந்தாளியானது
காதலும் !
சிலர் நட்பென்று
சொல்லி
காதலெனவும்
சிலர் முதலிலேயே
காதலெனவும்
முடித்தார்கள்
சிலர் மென்மையாகவும்
சிலர் கையறுத்துக்
கொள்வேனெனவும்
தற்கொலை
செய்வேனெனவும்
வன்மையாகவும் !
சிலர் நான்
ஒரு பெண்ணென்று
மறந்தும்,சிலர்
அதுவே என்
பலவீனம்
என்றறிந்தும்
மிரட்டுதலாலும்
கட்டாயப்படுத்துதலாலும்
காதலைச் சொல்லிப்
பின்
என் சம்மதம்
கிடைக்காத பொழுது
எதிரிகளாகவும்
நண்பர்களாவும்
பிரிந்தார்கள்
நண்பனாய்ப்
இருந்தவன்
உன்னுடன்
இருந்தால்
உன் நினைவெனைக்
கொல்லும் என்று
பிரிந்தான்
எதிரியாய்ப்
ஆனவன்
உன்னை நிம்மதியாய்
வாழ விடமாட்டேன்
என்று சவாலுடன்
பிரிந்தான்
மொத்தத்தில்
எவரும்
இல்லை
இப்போது
என் அருகில் !
நீயே சொல் !
நான் செய்த
பிழை தான்
என்ன ?
நட்புடன்
பழகுவதும்
புன்னகைப்பதும்
எனது
குணமாயிருக்கையில்!
எப்படி காதலிக்க
முடியும் என்னால் ?
நடுத்தர குடும்பப்
பின்னணியில்
பிறந்தவளும்
பெற்றோரின்
வார்த்தைக்கு
மதிப்புக்
கொடுப்பவளுமான
எனக்கு
காதல் எனில்
கைக்கெட்டாததாய்
இருக்கையில் !
அப்படியே
காதலித்தாலும்
எத்தனை பேரை
காதலிக்க முடியும்
என்னால் !
பெண்ணென்றால்
இப்படித்தான்
என்கிறார்கள்
என்னால் ஏனோ
இதை இயல்பென
ஏற்றுக்கொள்ள
முடியவில்லை
என் மீது எனக்கே
வெறுப்பு வருகிறது
சில
நேரங்களில்
பெண்ணென
பிறந்தற்காக
இத்தனையும்
எதனால் ?
நான் சிரிக்கும்
அந்த ஒற்றைச்
சிரிப்பால் தானே
அதனால் தான்
நிறுத்தி விட்டேன்
அதை !
இப்போது
எனக்காக
கூட சிரிப்பதில்லை
நான் !
சொல் !
இன்னுமா
சிரித்திரு
என்கிறாய்
என்னை?
************
Posted on Thursday, February 4, 2010 -
காதல்
.jpg)
உன்னை
முழுதாய்
முழுங்கிய பின்
மீட்கிறேன்
உன்னை
கேமராவிடமிருந்து
**********
Posted on Wednesday, February 3, 2010 -
காதல்

நம் காதல்
குளத்தில்
என் இதயத்தை
மீன்களாக்கி
பிடித்தும்
விட்டும்
மகிழ்கிறாய்
உனக்கு
பொழுது
போகாத
சமயங்களில்
********
Posted on Monday, February 1, 2010 -
ஹைக்கூ
வளைந்து நெளிந்து
சீறிப் பாய்ந்தது
காட்டாறு.
***************