
எனக்கே
என்னிடம்
பிடிக்காத
என்
முன்கோபம்
கூட ரசிக்கிறாய்
நீ
என் அசைவுகள்
அத்தனையும்
படம் பிடித்து
ரசிக்கும்
உன் கண்களாலும்
அது ஒய்வாக
இருக்கும்போது
உன் விரல்களின்
கவிதைகளாலும்
என் காதலை
தூண்டிக்
கொண்டேயிருக்கிறாய்
எனக்கொன்றும்
செய்யத்
தெரிவதில்லை
உன் மீதும்
உன்
கவிதைகள்
மீதும்
பைத்தியம்
கொள்வதைத்
தவிர
***********
3 comments:
பாத்துங்க இப்பல்லாம் இந்த மாதிரி கவிதை சொல்லி ஏமாத்திடுறாங்க
கவிதை மட்டுமே போதுமா - ரசித்துக் காதலிப்பதற்கு - ம்ம்ம் - ஒவ்வொருவனு(ளூ)க்கும் ஒவ்வொரு விதமான ஆசை
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .
Post a Comment