உயிர்த் தோழியின் திருமணம்


விழியசைத்து
நீ விடைபெற்ற
தருணத்தில்
வழிந்தோடும்
உன்னுடைய
விழி நீராலும்
சேர்ந்தோடும்
என்னுடைய
விழி நீராலும்
கர்வப்படும்
நம் நட்பின்
புனிதம்!

நட்பு-ரத்து


இன்று உனது
திருமண நாள்
இதுவே நம் நட்பின்
கடைசி நாளாகவும்
இருக்கலாம்
என்னிடம்
நீ உன்
திருமண
அழைப்பிதழ்
கொடுத்த
நாளிலிருந்து
என்னை
தயார்படுத்திக்
கொள்ள
ஆரம்பித்த நான்
இன்று
முழுவதுமாய்
தயாராகியிருந்தேன்
உணர்ச்சியற்ற
ஜடமாய்

இனி உனக்கான
நட்பு எல்லைகள்
வகுக்கப்படலாம்

என்னுடனான
உன்
மணிநேர
பேச்சுக்கள்
யாவும் நொடி
நேரமாய்
சுருக்கப்படலாம்
அல்லது
இல்லாமலும்
போகலாம்

என் மீது
உன் பார்வைகள்
வீழக் கூட
உன் விழிகளுக்கு
அனுமதிகள்
மறுக்கப்படலாம்.

நடக்கப்போவது
எதுவானாலும்
என்ன செய்ய
முடியும்
என்னால்!
நட்பெனில்
விட்டுக்
கொடுப்பதென்று
என்னை நானே
சமாதானம் செய்து
கொள்வதை தவிர!

தலைமுறைகளின் தலைவிதி


தலைமுறைகள்
பல தாண்டினாலும்
தாமதமாகவே புரிந்து
கொள்ளப்படும்
அன்னையின் பாசமும்
தகப்பனின் தியாகமும்


வட நாட்டில்
பிறந்த ரோஜா
ஒன்று உன்
அழகைப் பற்றிய
செய்தியறிந்து
தற்கொலை
செய்து கொண்டதாம்.
அடுத்த பிறவியலேனும்
தமிழ்நாட்டில் பிறந்து
உன் கூந்தல் சேர
வேண்டும் என்ற
கோரிக்கையுடன்.!

என்று தணியும் இந்த வறுமையின் சோகம்

தொடர்வண்டி
பயணங்களின்
வழி நெடுகில்
கர்வமேற்றும்
வளரச்சிகள்
யாவையும்
கருணையில்லாமல்
உடைத்தெறியும்
கையேந்தி நின்று
கெஞ்சும்
சின்னஞ்சிறு
சிறுமியின்
சின்னஞ்சிறு
பார்வை !

கண்ணிமைக்காமல்

அவள் ஆசையுடன் சமைத்ததை
அமர்ந்து உண்ணாமல்
அதிலும் ஓர் குறை தேடி
திட்டிச் செல்லும் அவனையும்,
அவன் போன பின்
அழுது நோகும் அவளையும்
கண்ணிமைக்காமல் பார்த்திருக்கும்
கண்ணாடிப் பெட்டி
கரடி பொம்மை!

சக பிரயாணி ! ஆயினும் ............



மற்ற சராசரி பயணிகளைப்
போல அல்ல நீ !
அறிமுகத்திலேயெ சட்டென்று
நட்புக்கரம் நீட்டினாய்!
நட்பு எப்பொழுதும்
சுலபமானதாகவே இருக்கிறது
உனக்கு கை
வந்ததைப் போல!
ஏனோ சிலருக்கு அது
மிகவும் தொலைவாகவே
இருக்கிறது
அருகில் அமர்ந்தாலும்!
கரைத்தாய் நீ!
என் பயணத்தின்
சில மணித்துளிகளை
உன் உரையாடலாலும்,
மீதி மணித்துளிகளை
உன்னைப் பற்றிய கணிப்புகளாலும் !
நம்முடைய பயணம் முடிந்து
பல நாட்கள் கழிந்த பின்னும்
என்னுடனான உன் நட்பைத்
தொடர்கிறாய் இன்று வரை
அன்றைய என் எல்லா
கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி !
என்னுடைய இன்றைய
பயணங்களின் போது நினைவிலும்
நேரில் சந்திக்கும்போது
நிஜத்திலும்
பிரியத்துடனே
தரிசனம் தருகிறாய்
பெயருக்கு ஏற்றார் போல்!

உயிர்த் தோழியின் திருமணம்

Posted on Saturday, November 21, 2009 - 2 comments -


விழியசைத்து
நீ விடைபெற்ற
தருணத்தில்
வழிந்தோடும்
உன்னுடைய
விழி நீராலும்
சேர்ந்தோடும்
என்னுடைய
விழி நீராலும்
கர்வப்படும்
நம் நட்பின்
புனிதம்!

நட்பு-ரத்து

Posted on - 4 comments -


இன்று உனது
திருமண நாள்
இதுவே நம் நட்பின்
கடைசி நாளாகவும்
இருக்கலாம்
என்னிடம்
நீ உன்
திருமண
அழைப்பிதழ்
கொடுத்த
நாளிலிருந்து
என்னை
தயார்படுத்திக்
கொள்ள
ஆரம்பித்த நான்
இன்று
முழுவதுமாய்
தயாராகியிருந்தேன்
உணர்ச்சியற்ற
ஜடமாய்

இனி உனக்கான
நட்பு எல்லைகள்
வகுக்கப்படலாம்

என்னுடனான
உன்
மணிநேர
பேச்சுக்கள்
யாவும் நொடி
நேரமாய்
சுருக்கப்படலாம்
அல்லது
இல்லாமலும்
போகலாம்

என் மீது
உன் பார்வைகள்
வீழக் கூட
உன் விழிகளுக்கு
அனுமதிகள்
மறுக்கப்படலாம்.

நடக்கப்போவது
எதுவானாலும்
என்ன செய்ய
முடியும்
என்னால்!
நட்பெனில்
விட்டுக்
கொடுப்பதென்று
என்னை நானே
சமாதானம் செய்து
கொள்வதை தவிர!

தலைமுறைகளின் தலைவிதி

Posted on - 1 comments -


தலைமுறைகள்
பல தாண்டினாலும்
தாமதமாகவே புரிந்து
கொள்ளப்படும்
அன்னையின் பாசமும்
தகப்பனின் தியாகமும்

பொய் ஒன்று சொல்வேன்.....நீ நம்ப வேண்டும்.........

Posted on - 1 comments -


வட நாட்டில்
பிறந்த ரோஜா
ஒன்று உன்
அழகைப் பற்றிய
செய்தியறிந்து
தற்கொலை
செய்து கொண்டதாம்.
அடுத்த பிறவியலேனும்
தமிழ்நாட்டில் பிறந்து
உன் கூந்தல் சேர
வேண்டும் என்ற
கோரிக்கையுடன்.!

என்று தணியும் இந்த வறுமையின் சோகம்

Posted on Saturday, November 14, 2009 - 1 comments -

தொடர்வண்டி
பயணங்களின்
வழி நெடுகில்
கர்வமேற்றும்
வளரச்சிகள்
யாவையும்
கருணையில்லாமல்
உடைத்தெறியும்
கையேந்தி நின்று
கெஞ்சும்
சின்னஞ்சிறு
சிறுமியின்
சின்னஞ்சிறு
பார்வை !

கண்ணிமைக்காமல்

Posted on - 1 comments -

அவள் ஆசையுடன் சமைத்ததை
அமர்ந்து உண்ணாமல்
அதிலும் ஓர் குறை தேடி
திட்டிச் செல்லும் அவனையும்,
அவன் போன பின்
அழுது நோகும் அவளையும்
கண்ணிமைக்காமல் பார்த்திருக்கும்
கண்ணாடிப் பெட்டி
கரடி பொம்மை!

சக பிரயாணி ! ஆயினும் ............

Posted on Tuesday, November 3, 2009 - 1 comments -



மற்ற சராசரி பயணிகளைப்
போல அல்ல நீ !
அறிமுகத்திலேயெ சட்டென்று
நட்புக்கரம் நீட்டினாய்!
நட்பு எப்பொழுதும்
சுலபமானதாகவே இருக்கிறது
உனக்கு கை
வந்ததைப் போல!
ஏனோ சிலருக்கு அது
மிகவும் தொலைவாகவே
இருக்கிறது
அருகில் அமர்ந்தாலும்!
கரைத்தாய் நீ!
என் பயணத்தின்
சில மணித்துளிகளை
உன் உரையாடலாலும்,
மீதி மணித்துளிகளை
உன்னைப் பற்றிய கணிப்புகளாலும் !
நம்முடைய பயணம் முடிந்து
பல நாட்கள் கழிந்த பின்னும்
என்னுடனான உன் நட்பைத்
தொடர்கிறாய் இன்று வரை
அன்றைய என் எல்லா
கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி !
என்னுடைய இன்றைய
பயணங்களின் போது நினைவிலும்
நேரில் சந்திக்கும்போது
நிஜத்திலும்
பிரியத்துடனே
தரிசனம் தருகிறாய்
பெயருக்கு ஏற்றார் போல்!