திருமண நாள்
இதுவே நம் நட்பின்
கடைசி நாளாகவும்
இருக்கலாம்
என்னிடம்
நீ உன்
திருமண
அழைப்பிதழ்
கொடுத்த
நாளிலிருந்து
என்னை
தயார்படுத்திக்
கொள்ள
ஆரம்பித்த நான்
இன்று
முழுவதுமாய்
தயாராகியிருந்தேன்
உணர்ச்சியற்ற
ஜடமாய்
இனி உனக்கான
நட்பு எல்லைகள்
வகுக்கப்படலாம்
என்னுடனான
உன்
மணிநேர
பேச்சுக்கள்
யாவும் நொடி
நேரமாய்
சுருக்கப்படலாம்
அல்லது
இல்லாமலும்
போகலாம்
என் மீது
உன் பார்வைகள்
வீழக் கூட
உன் விழிகளுக்கு
அனுமதிகள்
மறுக்கப்படலாம்.
நடக்கப்போவது
எதுவானாலும்
என்ன செய்ய
முடியும்
என்னால்!
நட்பெனில்
விட்டுக்
கொடுப்பதென்று
என்னை நானே
சமாதானம் செய்து
கொள்வதை தவிர!
4 comments:
அழகு.
அன்பின் காதல்கவி
காதலிக்குத் திருமனம் - காதல் அல்ல நட்பு தொடர வேண்டுமா ? தொடருமா ? ம்ம்ம்ம்ம் நல்ல சிந்தனை
நல்வாழ்த்துகள்
அருமை
@ ஜமால் : வருகைக்கு நன்றி ஜமால்
@ சித்ரா : மிக்க நன்றி தோழி
@ பலா பட்டறை சங்கர் : மிக்க நன்றி நண்பா
@ கொற்றவை : மிக்க நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கு
@ சே.குமார் : மிக நன்றி நண்பா
@ ரிசபன் : மிக்க நன்றி தோழா
@ அசோக் : மிக்க நன்றி அசோக்
@ சீமான் கனி : மிக்க நன்றி தோழா சவுதில உங்களுக்கும் எனக்கும் ஹோட்டல வேண்டுமானால் பொங்கல் உண்டு..
@ விஜய் : உங்களின் தொடர் ஊகத்திற்கு மிக்க நன்றி அண்ணா
@ விதூஷ் : உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி
@ காமராஜ் : உங்களை போன்ற மூத்த எழுத்தாளர்களின் கருத்துக்கள் எனக்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் மிக்க நன்றி காமராஜ் அவர்களே...
@ ஜான் : உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே..
@ குட்டிப்பையா : உங்களின் தலத்தில் உள்ள கவிதைகள் மிக நன்று. உங்களின் வருகைக்கு மிக்க நன்றி
@ உயிரோடை லாவண்யா: உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி
@ஹேமா : உங்களின் விருது பெற்ற பதிவினை இப்போதுதான் படித்தேன் மிகவும் அருமை...உங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி தோழி
@ ஜெனோவா : வாங்க வாங்க நண்பா உங்களோடைய வருகையால் நான்தான் சதோஷம் அடைய வேண்டும் உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி...
Post a Comment