
தன்னால்
கீழே
விழாமல்
தனியாக
ஓட முடியும்
என
நம்பும் வரை
குழந்தையின்
தனியான
ஓட்டங்கள்
வேகமாய்
இருந்ததில்லை
தாய் தன்னை
பின்தொடரும்
போது மட்டுமே
அதன் ஓட்டம்
கட்டுக்குள்
அடங்காமல்
எல்லை மீறும்
ஏனெனில்
தன்னை
காக்கும்
தெய்வம் பின்
தொடர்வதால் !
********************
1 comments:
//ஏனெனில்
தன்னை
காக்கும்
தெய்வம் பின்
தொடர்வதால் !///
ஆஹா.... அருமை.....
Post a Comment