ஹைக்கூ

மாமியாரும் மருமகளும்
பக்கம் பக்கம் உட்கார்ந்தபின்
ஆரம்பமானது சண்டை
தொலைக்காட்சி தொடரில் !

அப்பா

நான்காண்டுகளுக்குப் பின்
ஊர் திரும்புகிறேன்
கைநிறைய சம்பாதித்துக் கொண்டு !
உறவினர் சந்திப்பு
கொண்டு வந்த பொருட்களை
பகிர்ந்தளித்தேன் !
திருப்தியும் அதிருப்தியும்
மாறி மாறி விடைகளாய் !
சிலருக்கு பொருட்களாலும்
சிலருக்கு வார்த்தைகளாலும்
சமாதானம் !
அனைவரையும் அனுப்பிய பின்
மனைவியின் பக்கம் திரும்பினேன் !
விழிநிறைய மகிழ்வானாள்-நெடு நாள் தவிப்பும் தெரிய !
அவளுடன் நின்ற என் மகள் அவள் சேலையில்
முகம் புதைத்தாள் என்னைக் கண்டவுடன் !
என் மனது முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தாலும்
எங்கோ வலிக்கத்தான் செய்கின்றது என்னுள் !
என் மனைவி "அப்பாடீ ! அப்பாகிட்ட போடீ!" என்று
என்னையே என் மகளிடம்
அறிமுகம் செய்யும் ஒவ்வொருமுறையும் !

முதல் சந்திப்பு !

(திருப்பூர் தோழி ஜாக்லின் அமலாவின் வேண்டுகோளுக்காக )அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்
என் இரவைக் கெடுத்தன
நடுநிசி வரை நீண்டன தினமும்
என் தூக்கமில்லா இரவுகள் !
என் அழகில் சந்தேகம் வந்தது என்னுள்
என்னையும் என்னைச்சுற்றியும்
அழகுபடுத்த முனைந்தேன் !
என் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் !
உன்னுடன் சேர்த்து எனக்கு
காதலும் அறிமுகம் ஆகியது அன்று தான் !
அதே நாள் தான் என் வயதையும்
எனக்குச் சொல்லியது !
வானொலியில் வரும் பாடல்கள்
எனக்காக எழுதப்படுவதாக உணர்ந்ததும்
உலகே அன்பு மயமானதும் அன்று முதல் தான் !
அன்று நாம் பேசிய வார்த்தைகளும்
பார்த்த பார்வைகளும்
இன்று வரை ஓடிக்கொண்டேயிருக்கிறது
என் நினைவுத்திரையில்
பல வெள்ளி விழாக்களைக் கடந்தும்
முடிவுறாமல் !

தென்றல் !

(திருப்பூர் தோழி ப்ரீத்தியின் வேண்டுகோளுக்காக )

வழியில் சந்திக்கும்
அனைவரையும் முத்தமிட
அனுமதி
தென்றலுக்கு மட்டும் !

தெரிகிறாய் !

தேவதைகள் ஆயிரம் சாலையில்
யாரையும் கவனிப்பதில்லை நான்
கவனித்தாலும் தெரிகிறாய் நீ
அவர்களின் ஏதோ ஒன்றில் !

என் நிலை!
நீ என்னைப் பார்க்கும்போது
என்னுள் நிகழ்கிறது ஜல்லிகட்டு !
முடிவில்
சாந்தமாய் நான்
உன் பின்னால் !

ஹைக்கூ

Posted on Sunday, May 17, 2009 - 1 comments -

மாமியாரும் மருமகளும்
பக்கம் பக்கம் உட்கார்ந்தபின்
ஆரம்பமானது சண்டை
தொலைக்காட்சி தொடரில் !

அப்பா

Posted on Monday, May 4, 2009 - 2 comments -

நான்காண்டுகளுக்குப் பின்
ஊர் திரும்புகிறேன்
கைநிறைய சம்பாதித்துக் கொண்டு !
உறவினர் சந்திப்பு
கொண்டு வந்த பொருட்களை
பகிர்ந்தளித்தேன் !
திருப்தியும் அதிருப்தியும்
மாறி மாறி விடைகளாய் !
சிலருக்கு பொருட்களாலும்
சிலருக்கு வார்த்தைகளாலும்
சமாதானம் !
அனைவரையும் அனுப்பிய பின்
மனைவியின் பக்கம் திரும்பினேன் !
விழிநிறைய மகிழ்வானாள்-நெடு நாள் தவிப்பும் தெரிய !
அவளுடன் நின்ற என் மகள் அவள் சேலையில்
முகம் புதைத்தாள் என்னைக் கண்டவுடன் !
என் மனது முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தாலும்
எங்கோ வலிக்கத்தான் செய்கின்றது என்னுள் !
என் மனைவி "அப்பாடீ ! அப்பாகிட்ட போடீ!" என்று
என்னையே என் மகளிடம்
அறிமுகம் செய்யும் ஒவ்வொருமுறையும் !

முதல் சந்திப்பு !

Posted on Saturday, May 2, 2009 - 1 comments -

(திருப்பூர் தோழி ஜாக்லின் அமலாவின் வேண்டுகோளுக்காக )அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்
என் இரவைக் கெடுத்தன
நடுநிசி வரை நீண்டன தினமும்
என் தூக்கமில்லா இரவுகள் !
என் அழகில் சந்தேகம் வந்தது என்னுள்
என்னையும் என்னைச்சுற்றியும்
அழகுபடுத்த முனைந்தேன் !
என் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் !
உன்னுடன் சேர்த்து எனக்கு
காதலும் அறிமுகம் ஆகியது அன்று தான் !
அதே நாள் தான் என் வயதையும்
எனக்குச் சொல்லியது !
வானொலியில் வரும் பாடல்கள்
எனக்காக எழுதப்படுவதாக உணர்ந்ததும்
உலகே அன்பு மயமானதும் அன்று முதல் தான் !
அன்று நாம் பேசிய வார்த்தைகளும்
பார்த்த பார்வைகளும்
இன்று வரை ஓடிக்கொண்டேயிருக்கிறது
என் நினைவுத்திரையில்
பல வெள்ளி விழாக்களைக் கடந்தும்
முடிவுறாமல் !

தென்றல் !

Posted on - 1 comments -

(திருப்பூர் தோழி ப்ரீத்தியின் வேண்டுகோளுக்காக )

வழியில் சந்திக்கும்
அனைவரையும் முத்தமிட
அனுமதி
தென்றலுக்கு மட்டும் !

தெரிகிறாய் !

Posted on - 1 comments -

தேவதைகள் ஆயிரம் சாலையில்
யாரையும் கவனிப்பதில்லை நான்
கவனித்தாலும் தெரிகிறாய் நீ
அவர்களின் ஏதோ ஒன்றில் !

என் நிலை!
நீ என்னைப் பார்க்கும்போது
என்னுள் நிகழ்கிறது ஜல்லிகட்டு !
முடிவில்
சாந்தமாய் நான்
உன் பின்னால் !