அட !


சற்று நீ முன் சிரித்தபோது தான்
சிதறித் தொலைந்தேன் நான் !
அதை மெல்ல தேடி எடுப்பதற்குள்
ஏன் மறுபடி சிரித்தாய் ?

அவளுடன் ஓர் தேநீர் தருணம்


அவள் அறிமுகம் ஓர் மழை நாளில் !
சில நாட்கள் பின் ஓர் சந்திப்பில்
தேநீர் அருந்த அழைத்தேன் !
சற்று நடுத்தரமானதுதான்
சட்டென பிடிக்கும் அழகுடன்
இருந்தது அந்த தேநீர் விடுதி!
இரண்டு தேநீர் சொல்லிவிட்டு
இருக்கையில் உட்கார்ந்தோம் !
மெலிதாய் விரல்களில் பிடித்து
அவள் அருந்தும் அழகை ரசித்தேன்
அவள் அறியாத பொழுதுகளில் !
பேசிக்கொண்டேயிருந்தாள் !
பல வார்த்தைகள் காதில் விழவில்லை
ஒரே நேரத்தில் எத்தனையை கவனிப்பது ?
சிறிது நேரத்திற்குப்பின்
என் தேநீரை ஞாபகமூட்டிச் சிரித்தாள் !
பேசிக்கொண்டே பார்வையை சுற்றி சுழல விட்டேன் நான் !
அங்கு ஈக்கள் மொய்க்கவில்லை மேஜை மீது
ஆனால் ,
பல கண்கள் மொய்த்திருந்தது எங்கள் மீது !

என் அன்னைக்கு !



உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!

உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !

உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !

எல்லாம் மீண்டும் கிடைக்காதா? என்றே

ஏக்கம் பிறக்கும் தினமும்!

பலரும் பார்க்க,வியக்க மிகச்

சரியாய் வளர்த்தாய் என்னை !

வாழ்க்கை வாளின் கூர்மைகள் பலவும்

உன்னை குத்தி இம்சித்தும்

எள்ளளவும் அவை எனை அணுகாது

வழி தடுத்தாய் நீ !

தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!

உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது

என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.

உன் ஆசைகள் பலவும் எரிந்து மட்கித்தான்

என் ஆசைமலர்கள் மலர்ந்தன என்று

முன்பு அறியவில்லை நான் !

நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்

ஒன்று உண்டென்றால் அது நீதான் !

நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,மாறாக

உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !வளர்ந்தேன் !

உலகிலேயே தித்திப்பான கனி எது என்று

எனைக்கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீதானென !

ஆம்! கனி தான் தின்னத் தின்ன

திகட்டாத கனி !



என்ன செய்வாய் !




விழி நோக்கும் ஆண்மகனை
விரும்புவாளாம் பெண்மகள் !
விழி காண வழியில்லை !
நீ அங்கே !நான்இங்கே !
விரும்புவாயா என்னை?

நம் நட்பு

(குடந்தை நண்பன் கார்த்திக்கின் வேண்டுகோளுக்காக )


சில நாட்கள் முன்பு அது நமக்கு தெரியாமலே
நம்முள் முளைத்திருந்தது .
நாம் சொல்லிக்கொள்ளாமலே அது
நம்முள் நிறைந்திருந்தது.
சில நாட்கள் நம்மிடம் அது
கோபங்களாகவும் ,கவலைகளாகவும் ,
கண்ணீராகவும்,மௌனங்களாகவும்,
நிறைந்திருந்தது .
பல நாட்கள் நம்மிடம் அது
சந்தோசங்களாகவும்,அரட்டைகளாகவும்,
ஆனந்த விழிநீராகவும், பகிர்தலாகவும் ,
நிறைந்திருந்தது .
இன்றும் அது நிறைகிறது
இடைவேளிகளால்
இன்னமும் நிறையும் அது ஏதோ ஒரு வடிவில்
இடைவெளி குறைந்தாலும்! அதிகமானாலும்!

சந்திக்க ஏன் மறுத்தாய் ?




விழி காண
விரும்பினேன்
விடை தெரியவில்லை
விரித்துவிட்டாள்! கையை..
விம்முகிறது இதயம் !
விழி நீரோடு!
***********
வார்த்தைகள் நிறைந்த பொழுதுகள்
வார்த்தன வழியெங்கும் பூக்களை !
வார்த்தையற்ற பொழுதுகள்
வார்க்கின்றன வழியெங்கும் முட்களை !

காதல் பானை







முதலில் நீ என்னில் நிறைந்தாய் !

பின் நான் உன்னில் நிறைந்தேன் !



நிரம்பி வழிந்தது நம் காதல் பானை !

திருப்பம்


கண்கள் மோதியதால் காயம்
கண்டது என் நெஞ்சம்
காதல் என உரைத்தது உலகம்
நம்பவில்லை நான்
சென்றேன் மருத்துவனிடம்
சோதனைகள் நிகழ்ந்தபின்
சொன்னான் அவன்
காயம் இல்லையடா ! மடையா !
காணவில்லை இதயம் என்று
கலங்கினேன் நான் !
மெல்ல மீண்டேன் நினைவை
சென்றேன் அவளிடம்
'கொடு என் இதயத்தை' என்றேன் !
மறுத்தாள் அவள் . பின் 'மறு நாள் வா' என்றாள்!
சென்றேன் மறுநாள் !கொடுத்தாள் !
ஆனால் அது என்னுடையது அல்ல !
வினவினேன் அவளிடம் !மெலிதாய் சிரித்தாள் !
பின் பதிலுரைத்தாள் !
'அது என்னுடையது 'என !

கடலை விற்பனையாளன்


கடலைகளை பிரித்தெடுத்து

குவியலாய்

காகித சுருள்கள் நேர்த்தியான கோபுரமாய்

மணலோடு மரண ஓலமிட வறுக்கின்றான்

பசி ஓலமிடும் அவன் வயிற்றின் தேவைக்காக !

வறுக்கும் ஓசையும் தட்டும் சத்தமும்

கவன ஈர்ப்பு இசையாக,

பதமாய் வறுக்கும் அவனை

பதம் பார்க்கிறது வாழ்க்கை !
"கடைசியில் என்னிடம் தான் வருவாய்"

சபிக்கும் மணலை வறுக்கிறான்!மீண்டும்! மீண்டும் !

உண்ணப்படுவதால் தொடர்கிறது இவன் வாழ்க்கை !

ஆம்!இவன் விற்பதை உண்பவர்களால்!


'இரண்டு ரூபாய் அநியாயம் ' என பேரம் பேசுவார்கள்!

இவன் உழைப்பின் மதிப்பறியார்!

'கடலையாய்' ஜோடிகள் !

'அரசியலாய்' பெரிசுகள் !

`கிசு கிசுப்பாய் 'மாமிகள் !

'ஆசையாய்'சிறிசுகள் !

என அனைவரும் மெள்ள! மெள்ள !

நகர்கிறது அவன் வாழ்க்கை மெல்ல மெல்ல ....

ஹைக்கூ கவிதைகள்

தடுக்கி விழுந்தாள்
இதயத்தில் காயம்
விபச்சாரம் !
********
சொகுசான வாழ்க்கை
வாழ முடியவில்லை
வீட்டுச் சிறை !

********

அழகிய பெண் சாலையில்
ரசிக்க முடியவில்லை
அருகில் மனைவி !

********

முத்தமிட்டதால்
பிரச்சினை
சாலை விபத்து !

*********

புதைத்தான் வளர்ந்தது செடி
புதைத்தான் வளரவில்லை
மனிதன் !

*********

ஒரு நாள் வாழ்க்கை
அர்த்தப்பட்டது
நிழல் படப் பூ !

*********
பழமாகவில்லை
காயானது
தேங்காய் !

*********
புகைத்ததால் கிடைத்த பணம்
புகையானது
தீபாவளி அன்று !

******

மிகச் சிறிய துவாரத்திலிருந்து
மிகப் பெரிய முட்டை
சோப்புக் குமிழ் !

********
குழந்தைகளுக்கு துணிகள் வேண்டும்
கணவனிடம் சண்டை
கிழிந்த புடவையுடன் !
*********
நிலவிற்கும் கால்கள் உண்டோ
ஆராய்ச்சியில்
காதலன் !
*********
புத்தகத்தின் பக்கங்கள்
படிக்கப்பட்டது மிக வேகமாய்
காற்று !
*********
இதயமாற்று அறுவை சிகிச்சை
கத்தியின்றி இரத்தமின்றி
காதல் !
**********
பூச்சி மருந்து
செத்தது
மனிதன் !
**********
நான்கு கால்களுடன்
நிமிர்ந்து நிற்கிறது
லாரி !
**********

நீ இரத்தமடா
பிழைத்தவனிடம் சொல்கிறான்
இரத்தம் கொடுத்தவன் !

*********

முயற்சிகள் தோற்றது
வழிகள் தெரிந்தும்
கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !

*********

வரவில்லை மலேரியா
கொசுக்கள் கடித்தும்
சேரி மக்கள் !

**********

சுற்றி சுற்றி வந்தது
அதனுடைய உலகத்தை
மீன் தொட்டி மீன் !

*****

மின்சாரம் இல்லை
கண்களில் ஒலி
கருணை!

உன் காதல்

நீயாய் எனக்கு கொடுத்த
முதல் பரிசு .

உன் அருகில்


எங்கேயோ தொலைந்த மனம்


என்னிடமே வந்து சேருகிறது


நீ அருகில் இருக்கையில் .

தேடல்

உனக்குள் உன்னை தேடு
சொன்னார்கள் ஞானிகள் !
தேடினேன்! கிடைத்தாய் நீ!

குழப்பம்

காலையில் உனக்காக அழகாக
தலை சீவிக் கொள்கிறேன் .
இரவில் அதை நானே கலைத்துக்கொள்கிறேன் .

காரணம்

உன் கைக்
கடிகாரத்தின்
நொடி முள்
நின்று நின்று
செல்லும்
ஒவ்வொரு
நொடியும்

உன் அழகைப்
பார்த்து வியந்து
ரசித்து கொண்டே !

முட்டைக்கண்ணி




உன் விழிச் சாரலில் நனைந்த முதல் நாள்
என் வாழ்வின் ஓளி மிக்க நாள்
நீ உன் கண்களை திறந்தாய்
நான் காதல் கற்றேன்.
உன் இதழ்கள் திறந்தாய்
என் இதயம் தொலைத்தேன்.
******
காதல் என்ற வார்த்தையை
எனக்கு அறிமுகம் செய்தாய் .
உன்னைப்பற்றி கவிதை எழுத
வார்த்தைகளை தேட வைத்தாய்
வார்த்தைகளை தேடி அலைகையில்
வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு மெல்ல சிரித்தாய் !
கனவுலகை அறிமுகம் செய்தாய்
கனவுக்குள் விளையாடினாய்
எத்தனையோ உறவுகள் இருந்தாலும்
புது உறவாய் நுழைந்தாய்
வாழ்வாங்கு வாழ்வாய் என்று வையகமே
புகழ்ந்தாலும் உன் ஒற்றை சொல்லுக்காய்
உயிர் நோக காக்க வைத்தாய்
காத்திருக்கிறேன் உனக்காக..............உயிர் உள்ள வரையில்!
************
என்னுடன் நீ பேசவில்லைஎனில்
என் இதயத்தில் எரிமலை .
என்னுடன் பேசிவிட்டாலோ
என் இதயத்தில் அடைமழை .
***********
உன்னை பார்த்தப்பின் கைதேர்ந்த
நடிகனாகிறேன் உன்னைப்பார்க்காததைப் போல!

அட !

Posted on Tuesday, October 21, 2008 - 2 comments -


சற்று நீ முன் சிரித்தபோது தான்
சிதறித் தொலைந்தேன் நான் !
அதை மெல்ல தேடி எடுப்பதற்குள்
ஏன் மறுபடி சிரித்தாய் ?

அவளுடன் ஓர் தேநீர் தருணம்

Posted on Friday, October 10, 2008 - 1 comments -


அவள் அறிமுகம் ஓர் மழை நாளில் !
சில நாட்கள் பின் ஓர் சந்திப்பில்
தேநீர் அருந்த அழைத்தேன் !
சற்று நடுத்தரமானதுதான்
சட்டென பிடிக்கும் அழகுடன்
இருந்தது அந்த தேநீர் விடுதி!
இரண்டு தேநீர் சொல்லிவிட்டு
இருக்கையில் உட்கார்ந்தோம் !
மெலிதாய் விரல்களில் பிடித்து
அவள் அருந்தும் அழகை ரசித்தேன்
அவள் அறியாத பொழுதுகளில் !
பேசிக்கொண்டேயிருந்தாள் !
பல வார்த்தைகள் காதில் விழவில்லை
ஒரே நேரத்தில் எத்தனையை கவனிப்பது ?
சிறிது நேரத்திற்குப்பின்
என் தேநீரை ஞாபகமூட்டிச் சிரித்தாள் !
பேசிக்கொண்டே பார்வையை சுற்றி சுழல விட்டேன் நான் !
அங்கு ஈக்கள் மொய்க்கவில்லை மேஜை மீது
ஆனால் ,
பல கண்கள் மொய்த்திருந்தது எங்கள் மீது !

என் அன்னைக்கு !

Posted on - 1 comments -



உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!

உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !

உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !

எல்லாம் மீண்டும் கிடைக்காதா? என்றே

ஏக்கம் பிறக்கும் தினமும்!

பலரும் பார்க்க,வியக்க மிகச்

சரியாய் வளர்த்தாய் என்னை !

வாழ்க்கை வாளின் கூர்மைகள் பலவும்

உன்னை குத்தி இம்சித்தும்

எள்ளளவும் அவை எனை அணுகாது

வழி தடுத்தாய் நீ !

தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!

உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது

என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.

உன் ஆசைகள் பலவும் எரிந்து மட்கித்தான்

என் ஆசைமலர்கள் மலர்ந்தன என்று

முன்பு அறியவில்லை நான் !

நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்

ஒன்று உண்டென்றால் அது நீதான் !

நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,மாறாக

உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !வளர்ந்தேன் !

உலகிலேயே தித்திப்பான கனி எது என்று

எனைக்கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீதானென !

ஆம்! கனி தான் தின்னத் தின்ன

திகட்டாத கனி !



என்ன செய்வாய் !

Posted on Wednesday, October 8, 2008 - 1 comments -




விழி நோக்கும் ஆண்மகனை
விரும்புவாளாம் பெண்மகள் !
விழி காண வழியில்லை !
நீ அங்கே !நான்இங்கே !
விரும்புவாயா என்னை?

நம் நட்பு

Posted on - 1 comments -

(குடந்தை நண்பன் கார்த்திக்கின் வேண்டுகோளுக்காக )


சில நாட்கள் முன்பு அது நமக்கு தெரியாமலே
நம்முள் முளைத்திருந்தது .
நாம் சொல்லிக்கொள்ளாமலே அது
நம்முள் நிறைந்திருந்தது.
சில நாட்கள் நம்மிடம் அது
கோபங்களாகவும் ,கவலைகளாகவும் ,
கண்ணீராகவும்,மௌனங்களாகவும்,
நிறைந்திருந்தது .
பல நாட்கள் நம்மிடம் அது
சந்தோசங்களாகவும்,அரட்டைகளாகவும்,
ஆனந்த விழிநீராகவும், பகிர்தலாகவும் ,
நிறைந்திருந்தது .
இன்றும் அது நிறைகிறது
இடைவேளிகளால்
இன்னமும் நிறையும் அது ஏதோ ஒரு வடிவில்
இடைவெளி குறைந்தாலும்! அதிகமானாலும்!

சந்திக்க ஏன் மறுத்தாய் ?

Posted on Tuesday, October 7, 2008 - 1 comments -




விழி காண
விரும்பினேன்
விடை தெரியவில்லை
விரித்துவிட்டாள்! கையை..
விம்முகிறது இதயம் !
விழி நீரோடு!
***********
வார்த்தைகள் நிறைந்த பொழுதுகள்
வார்த்தன வழியெங்கும் பூக்களை !
வார்த்தையற்ற பொழுதுகள்
வார்க்கின்றன வழியெங்கும் முட்களை !

காதல் பானை

Posted on Friday, August 8, 2008 - 1 comments -







முதலில் நீ என்னில் நிறைந்தாய் !

பின் நான் உன்னில் நிறைந்தேன் !



நிரம்பி வழிந்தது நம் காதல் பானை !

திருப்பம்

Posted on Friday, July 11, 2008 - 1 comments -


கண்கள் மோதியதால் காயம்
கண்டது என் நெஞ்சம்
காதல் என உரைத்தது உலகம்
நம்பவில்லை நான்
சென்றேன் மருத்துவனிடம்
சோதனைகள் நிகழ்ந்தபின்
சொன்னான் அவன்
காயம் இல்லையடா ! மடையா !
காணவில்லை இதயம் என்று
கலங்கினேன் நான் !
மெல்ல மீண்டேன் நினைவை
சென்றேன் அவளிடம்
'கொடு என் இதயத்தை' என்றேன் !
மறுத்தாள் அவள் . பின் 'மறு நாள் வா' என்றாள்!
சென்றேன் மறுநாள் !கொடுத்தாள் !
ஆனால் அது என்னுடையது அல்ல !
வினவினேன் அவளிடம் !மெலிதாய் சிரித்தாள் !
பின் பதிலுரைத்தாள் !
'அது என்னுடையது 'என !

கடலை விற்பனையாளன்

Posted on Thursday, July 3, 2008 - 1 comments -


கடலைகளை பிரித்தெடுத்து

குவியலாய்

காகித சுருள்கள் நேர்த்தியான கோபுரமாய்

மணலோடு மரண ஓலமிட வறுக்கின்றான்

பசி ஓலமிடும் அவன் வயிற்றின் தேவைக்காக !

வறுக்கும் ஓசையும் தட்டும் சத்தமும்

கவன ஈர்ப்பு இசையாக,

பதமாய் வறுக்கும் அவனை

பதம் பார்க்கிறது வாழ்க்கை !
"கடைசியில் என்னிடம் தான் வருவாய்"

சபிக்கும் மணலை வறுக்கிறான்!மீண்டும்! மீண்டும் !

உண்ணப்படுவதால் தொடர்கிறது இவன் வாழ்க்கை !

ஆம்!இவன் விற்பதை உண்பவர்களால்!


'இரண்டு ரூபாய் அநியாயம் ' என பேரம் பேசுவார்கள்!

இவன் உழைப்பின் மதிப்பறியார்!

'கடலையாய்' ஜோடிகள் !

'அரசியலாய்' பெரிசுகள் !

`கிசு கிசுப்பாய் 'மாமிகள் !

'ஆசையாய்'சிறிசுகள் !

என அனைவரும் மெள்ள! மெள்ள !

நகர்கிறது அவன் வாழ்க்கை மெல்ல மெல்ல ....

ஹைக்கூ கவிதைகள்

Posted on Wednesday, July 2, 2008 - 1 comments -

தடுக்கி விழுந்தாள்
இதயத்தில் காயம்
விபச்சாரம் !
********
சொகுசான வாழ்க்கை
வாழ முடியவில்லை
வீட்டுச் சிறை !

********

அழகிய பெண் சாலையில்
ரசிக்க முடியவில்லை
அருகில் மனைவி !

********

முத்தமிட்டதால்
பிரச்சினை
சாலை விபத்து !

*********

புதைத்தான் வளர்ந்தது செடி
புதைத்தான் வளரவில்லை
மனிதன் !

*********

ஒரு நாள் வாழ்க்கை
அர்த்தப்பட்டது
நிழல் படப் பூ !

*********
பழமாகவில்லை
காயானது
தேங்காய் !

*********
புகைத்ததால் கிடைத்த பணம்
புகையானது
தீபாவளி அன்று !

******

மிகச் சிறிய துவாரத்திலிருந்து
மிகப் பெரிய முட்டை
சோப்புக் குமிழ் !

********
குழந்தைகளுக்கு துணிகள் வேண்டும்
கணவனிடம் சண்டை
கிழிந்த புடவையுடன் !
*********
நிலவிற்கும் கால்கள் உண்டோ
ஆராய்ச்சியில்
காதலன் !
*********
புத்தகத்தின் பக்கங்கள்
படிக்கப்பட்டது மிக வேகமாய்
காற்று !
*********
இதயமாற்று அறுவை சிகிச்சை
கத்தியின்றி இரத்தமின்றி
காதல் !
**********
பூச்சி மருந்து
செத்தது
மனிதன் !
**********
நான்கு கால்களுடன்
நிமிர்ந்து நிற்கிறது
லாரி !
**********

நீ இரத்தமடா
பிழைத்தவனிடம் சொல்கிறான்
இரத்தம் கொடுத்தவன் !

*********

முயற்சிகள் தோற்றது
வழிகள் தெரிந்தும்
கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !

*********

வரவில்லை மலேரியா
கொசுக்கள் கடித்தும்
சேரி மக்கள் !

**********

சுற்றி சுற்றி வந்தது
அதனுடைய உலகத்தை
மீன் தொட்டி மீன் !

*****

மின்சாரம் இல்லை
கண்களில் ஒலி
கருணை!

உன் காதல்

Posted on Sunday, May 18, 2008 - 1 comments -

நீயாய் எனக்கு கொடுத்த
முதல் பரிசு .

உன் அருகில்

Posted on - 1 comments -


எங்கேயோ தொலைந்த மனம்


என்னிடமே வந்து சேருகிறது


நீ அருகில் இருக்கையில் .

தேடல்

Posted on - 1 comments -

உனக்குள் உன்னை தேடு
சொன்னார்கள் ஞானிகள் !
தேடினேன்! கிடைத்தாய் நீ!

குழப்பம்

Posted on - 1 comments -

காலையில் உனக்காக அழகாக
தலை சீவிக் கொள்கிறேன் .
இரவில் அதை நானே கலைத்துக்கொள்கிறேன் .

காரணம்

Posted on - 1 comments -

உன் கைக்
கடிகாரத்தின்
நொடி முள்
நின்று நின்று
செல்லும்
ஒவ்வொரு
நொடியும்

உன் அழகைப்
பார்த்து வியந்து
ரசித்து கொண்டே !

முட்டைக்கண்ணி

Posted on - 1 comments -




உன் விழிச் சாரலில் நனைந்த முதல் நாள்
என் வாழ்வின் ஓளி மிக்க நாள்
நீ உன் கண்களை திறந்தாய்
நான் காதல் கற்றேன்.
உன் இதழ்கள் திறந்தாய்
என் இதயம் தொலைத்தேன்.
******
காதல் என்ற வார்த்தையை
எனக்கு அறிமுகம் செய்தாய் .
உன்னைப்பற்றி கவிதை எழுத
வார்த்தைகளை தேட வைத்தாய்
வார்த்தைகளை தேடி அலைகையில்
வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு மெல்ல சிரித்தாய் !
கனவுலகை அறிமுகம் செய்தாய்
கனவுக்குள் விளையாடினாய்
எத்தனையோ உறவுகள் இருந்தாலும்
புது உறவாய் நுழைந்தாய்
வாழ்வாங்கு வாழ்வாய் என்று வையகமே
புகழ்ந்தாலும் உன் ஒற்றை சொல்லுக்காய்
உயிர் நோக காக்க வைத்தாய்
காத்திருக்கிறேன் உனக்காக..............உயிர் உள்ள வரையில்!
************
என்னுடன் நீ பேசவில்லைஎனில்
என் இதயத்தில் எரிமலை .
என்னுடன் பேசிவிட்டாலோ
என் இதயத்தில் அடைமழை .
***********
உன்னை பார்த்தப்பின் கைதேர்ந்த
நடிகனாகிறேன் உன்னைப்பார்க்காததைப் போல!