அவளுடன் ஓர் தேநீர் தருணம்


அவள் அறிமுகம் ஓர் மழை நாளில் !
சில நாட்கள் பின் ஓர் சந்திப்பில்
தேநீர் அருந்த அழைத்தேன் !
சற்று நடுத்தரமானதுதான்
சட்டென பிடிக்கும் அழகுடன்
இருந்தது அந்த தேநீர் விடுதி!
இரண்டு தேநீர் சொல்லிவிட்டு
இருக்கையில் உட்கார்ந்தோம் !
மெலிதாய் விரல்களில் பிடித்து
அவள் அருந்தும் அழகை ரசித்தேன்
அவள் அறியாத பொழுதுகளில் !
பேசிக்கொண்டேயிருந்தாள் !
பல வார்த்தைகள் காதில் விழவில்லை
ஒரே நேரத்தில் எத்தனையை கவனிப்பது ?
சிறிது நேரத்திற்குப்பின்
என் தேநீரை ஞாபகமூட்டிச் சிரித்தாள் !
பேசிக்கொண்டே பார்வையை சுற்றி சுழல விட்டேன் நான் !
அங்கு ஈக்கள் மொய்க்கவில்லை மேஜை மீது
ஆனால் ,
பல கண்கள் மொய்த்திருந்தது எங்கள் மீது !

1 comments:

cheena (சீனா) said...

பல பொறாமைக் கண்கள் மொய்க்கத்தான் செய்யும் - உலக இயல்பு

நல்ல சிந்தனை கறபனை

நல்வாழ்த்துகள் காதல் கவி

அவளுடன் ஓர் தேநீர் தருணம்

Posted on Friday, October 10, 2008 - 1 comments -


அவள் அறிமுகம் ஓர் மழை நாளில் !
சில நாட்கள் பின் ஓர் சந்திப்பில்
தேநீர் அருந்த அழைத்தேன் !
சற்று நடுத்தரமானதுதான்
சட்டென பிடிக்கும் அழகுடன்
இருந்தது அந்த தேநீர் விடுதி!
இரண்டு தேநீர் சொல்லிவிட்டு
இருக்கையில் உட்கார்ந்தோம் !
மெலிதாய் விரல்களில் பிடித்து
அவள் அருந்தும் அழகை ரசித்தேன்
அவள் அறியாத பொழுதுகளில் !
பேசிக்கொண்டேயிருந்தாள் !
பல வார்த்தைகள் காதில் விழவில்லை
ஒரே நேரத்தில் எத்தனையை கவனிப்பது ?
சிறிது நேரத்திற்குப்பின்
என் தேநீரை ஞாபகமூட்டிச் சிரித்தாள் !
பேசிக்கொண்டே பார்வையை சுற்றி சுழல விட்டேன் நான் !
அங்கு ஈக்கள் மொய்க்கவில்லை மேஜை மீது
ஆனால் ,
பல கண்கள் மொய்த்திருந்தது எங்கள் மீது !

There has been 1 Responses to “அவளுடன் ஓர் தேநீர் தருணம்”

  1. cheena (சீனா) says:

    பல பொறாமைக் கண்கள் மொய்க்கத்தான் செய்யும் - உலக இயல்பு

    நல்ல சிந்தனை கறபனை

    நல்வாழ்த்துகள் காதல் கவி